பெரியகுளம் தென்கரை கோபால கிருஷ்ண சாமி கோவில் கும்பாபிஷேக விழாவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் தென் கரையில் பிரசித்திப் பெற்ற கோபாலகிருஷ்ண சுவாமி திருக்கோவில் உள்ளது. தற்போது இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான மகா கும்பாபிஷேக விழா இன்று காலை 10 மணிக்கு நடந்தது. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். பின்னர் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம், கதிர்காமு எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ.பொன்னம்மாள் மற்றும் பலர் பங்கேற்றனர்.

