“நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள்” : ரணிலின் நியமனத்தை மாற்ற முடியாது!

178 0

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான எனது முன்னைய அழைப்பை ; நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதிலளித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பாக நேற்றையதினம் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அதில் சில நிபந்தனைகளுக்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் கீழ் இடைக்கால அரசாங்கம் ஒன்றை, அமைப்பதற்கும் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவர் என்ற வகையில் பிரதமர் பதவியை ஏற்கவும் தான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அக்கடிதத்தில் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரின் கடதத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்திருந்ததார்.

மேலும் ஜனாதிபதி பதிலளிக்கையில்,

பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வதற்கான எனது முன்னைய அழைப்பை  நீங்கள் ஏற்க மறுத்துவிட்டீர்கள். ஏனைய கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னரே நான் ரணிலை நியமித்தேன். நாடு பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ள வேளையில் சவால்களுக்கு தீர்வு காண்பதற்காகவே பலமுறை பிரதமர் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கவை ; பிரதமராக நியமித்துள்ளேன். அதனை மாற்ற முடியாது. உங்கள் கட்சி உறுப்பினர்களில் யாரையாவது அமைச்சரவையில் சேர்க்க விரும்பினால், அதை எனக்குத் அறிவியுங்கள்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு ஜனாதிபதி பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.