இலங்கை வங்குரோத்து நிலையை அறிவித்ததன் காரணமாக நாட்டின் நிதி அமைப்பு வீழ்ச்சியடைந்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் இடைநிறுத்தப்படும் என சமூக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினரான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் கடந்த இரண்டு வருடங்களில் தொழிலாளர் வர்க்கம் பல சவால்களை எதிர்கொள்ள நேர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பல அரச, தனியார் துறைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதை அவர் நினைவு கூர்ந்தார், இது வேலையின்மை அளவை அதிகரிக்கிறது. குறிப்பாக சுற்றுலாத் துறையில் இதனைக் காண முடிகின்றது.
இரசாயன உர இறக்குமதியை அரசாங்கம் தடை செய்ததன் மூலம் விவசாயத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 12 ஆம் திகதி நாடு திவாலானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டு கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறைவினால் நாடு படிப்படியாக ஸ்தம்பிதமடைந்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

