அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையையும், ஜனாதிபதிக்கு எதிரான பதவி நீக்கப் பிரேரணையையும் எதிர்வரும் மே மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இன்று காலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு கூட்டத்தின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
தற்போதைய நிர்வாகம் பொதுமக்களின் அவல நிலையைப் புரிந்து கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினரான ஹேஷா விதானகே தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திலிருந்து சுயாதீனமாக தம்மைப் பிரகடனப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் முகபாவத்தை வெளிப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சந்தர்ப்பத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பிரேரணையில் கையொப்பமிட்ட எம்.பி.க்கள் மற்றும் கையொப்பமிட மறுத்த எம்.பி.க்களின் அடையாளங்களை வெளிப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

