பொதுமக்களின் போராட்டம் அரசாங்கத்தின் ஆணவ ஆட்சியை தடுத்து நிறுத்தியது – ரோஹன லக்ஸ்மன் பியதாச

309 0

தற்போதைய நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கத்தின் ஆணவ ஆட்சி தொடரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

பல நபர்களின் தன்னிச்சையான செயற்பாடுகளால் நாடு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்தார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பிரதமர், முன்னாள் நிதி, விவசாயம் மற்றும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து நபர்களுக்கு வரவு செலவுத் திட்டத்தில் 75 வீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நபர்களின் நிதி முறைகேடு நாட்டை அழிவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

ஜனாதிபதி, அமைச்சரவை, அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துக்கு எதிராக மிரிஹானவில் இருந்து இளைஞர்கள் வீதியில் இறங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.