விபத்தில் ஒருவர் பலி – ஒருவர் காயம்

259 0

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கங்கை பாலத்துக்கருகில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.

பாரவூர்தி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதிலே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் திருகோணமலை பொது மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மூதூர் பவர் ஹவுஸ் வீதியை சேர்ந்த 40 வயது மதிக்கதக்க ஒருவரே பலியானார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மூதூர் காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.