இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (26) 346.49 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 333.88 ரூபாவாகவும் இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இயங்கி வரும் சர்வதேச வர்த்தக வங்கியான Standard Chartered வங்கி இன்று தனது விற்பனை விலையை 355 ரூபாவாக அறிவித்துள்ளது.

