கல்வி அமைச்சுக்கு புதிய நியமனங்கள்!

374 0

கல்வி அமைச்சின் பணிப்பாளர் மற்றும் கல்வி ஆணையாளர் ஆகிய 16 பதவிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் வெற்றிடங்களுக்கு 16 பணிப்பாளர் மற்றும் கல்வி ஆணையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் கல்விக் குழுவின் அங்கீகாரத்துடன் புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த புதிய நியமனங்களுக்கான உரிய கடிதங்கள் நேற்று அமைச்சினால் கையளிக்கப்பட்டன.