பொல்கஹவெல பிரதேசத்தில் நேற்று ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொல்கஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புகையிரத நிலையத்திற்கு அருகே கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதியே குறித்தநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் பொல்கஹாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதான ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

