இளம் ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ் காலமானார்

412 0

மட்டக்களப்பு, துறைநீலாவணையைச் சேர்ந்த ஆசிரியரும் இளம் ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் தனது 34 வயதில் நேற்று சனிக்கிழமை இரவு காலமானார்.

கிழக்கு பல்கலைக் கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கை நிறுவகத்தின் நுண்கலைத்துறை பட்டதாரியான இவர் சம்மாந்துறை மத்திய கல்லூரியின்  ஆசிரியருமாவார்.

இளம் ஊடகவியலாளரான இவர் வீரகேசரி பத்திரிகையின் களுவாஞ்சிகுடி நிருபராக கடமையாற்றினார். பல்துறைக் கலைஞரான இவருக்கு கிழக்கு மாகாண கலாசார திணைக்களத்தினால் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிலையில் சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.அன்னாரின் இறுதிக்கிரியை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00மணியளவில் துறைநீலாவணை பொது மயானத்தில் இடம்பெற்றது.