நீதியான நீதிபதி

535 0

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்ப்பதற்காக உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்ற சிறிலங்கா காவல் துறையின் மனுவை கொழும்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டங்களிற்கு தலைமை தாங்கும் 16 பேரின் பெயர் விபரங்களை சிறிலங்கா காவல் துறை யினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.

ஆயிரக்கணக்கானவர்கள் காலிமுகத்திடலில் கூடுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படலாம் என சிறிலங்கா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

16 தனிநபர்களிற்கு எதிராக உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என சிறிலங்கா காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வன்முறைகள் இடம்பெறுவதற்கு முன்னர் அல்லது பொது குழப்பம் இடம்பெறுவதற்கு முன்னர் உத்தரவினை பிறப்பிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார்,

வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசத்தில் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூற மற்றும் ஆர்பாட்டங்களுக்கு முன் கூட்டியே சிறிலங்கா காவல் துறை நீதிமன்றத்தை நாடி தடை உத்தரவை பெற்று விடுவார்கள்.

வடக்கு கிழக்கில் பணியாற்றும் நீதிபதிகளுக்கு வேறு சட்ட புத்தகமா?

தென்பகுதி நீதிபதி நீதியின் பால் செயற்படுகிறார். ,

அப்போ வடக்கு கிழக்கு நீதிபதிகள்?