யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது(காணொளி)

418 0

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறையில், கலாசார மத்திய நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை புலோலி தெற்கு புற்றளையில், உள்ளக அலுவல்கள் வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அமைச்சினால் இக்கலாசார மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கலாசார மத்திய நிலையத்தை கலாசார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதன்போது, கொழும்பு தாமரைத் தடாகத்தில் நடைபெற்ற தேசிய கலாசார விழாவில் நடனமாடிய மாணவி, விருந்தினர்களால் நினைவுப் பரிசில் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன், வடமராட்சி கலாசார மத்திய நிலையத்திற்கென ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இசைக்கருவிகளும் நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், கலாசார அமைச்சர் எஸ்.பி.நாவின்ன, சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், கலாசார அமைச்சின் செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.வேதநாயகம், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.