கொட்டகலை பிரதேச மக்களின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய அம்பியூலன்ஸ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களினால் பொறுப்பேற்கப்பட்ட புதிய அம்பியூலன்ஸ், கொட்டகலை வைத்திசாலைக்கு இன்று கையளிக்கப்பட்டது.
கடந்த 21ஆம் திகதி, தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், வானிலை சீர்கேட்டினால் கொட்டகலை காங்கிரஸ் தொழிற்பயிற்சி நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
இதன்போது, ஜனாதிபதியின் வருகையை அறிந்த கொட்டகலை பிரதேச மக்கள், தமது குறைபாடுகளை ஜானாதிபதியிடம் தெரிவித்தனர்.
கொட்டகலை வைத்தியசாலைக்குப் புதிய அம்பியூலன்ஸ் வண்டியை உடனடியாகப் பெற்றுத் தருவதாக, பொதுமக்களுக்கு இதன்போது ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியையடுத்து, இந்த அம்பியூலன்ஸ் கையளிக்கப்பட்டது.

