ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை(காணொளி)

277 0

நுவரெலியா, ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, இன்று நடைபெற்றது.

ஹற்றன் பொலிஸ் நிலையத்தின் வருடாந்த அணிவகுப்பு மரியாதை, நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மஸ்ரீ முனுசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

காலை 07 மணிக்கு ஹற்றன் டன்பார் மைதானத்திலிருந்து ஆரம்பமான பொலிஸ் அணிவகுப்பு, ஹற்றன் நகர்வழியூடாக ஹற்றன் பொலிஸ் நிலையத்தை வந்தடைந்தது.

இதன்போது நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பத்மஸ்ரீ முனுசிங்க, பொலிஸ் வாகனங்களை சோதனைக்குட்படுத்தினார்.

இதேவேளை இதுவரை காலமும் ஹற்றன் பொலிஸ் நிலையத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவற்றிலுள்ள குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கு எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸாரிடம் கலந்துரையாடினார்.

ஹற்றன் பொலிஸ் நிலையத்தின், நுவரெலியா மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கலந்து கொண்ட முதலாவது வருடாந்த பொலிஸ் அணிவகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வருடாந்த அணிவகுப்பு மரியாதையின்போது, ஹற்றன் பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடுகமசூரிய, கோட்டம் ஒன்றிற்கான உதவி அத்தியட்சகர் ரஞ்சித் தஸநாயக்க, கோட்டம் இரண்டிற்கான உதவி அத்தியட்சகர் சமன்பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.