40 ரூபா லொத்தர் சீட்டு அறிமுகம் : வெற்றி வாய்ப்பு அதிகம்!

365 0

20 ரூபா அதிர்ஷ்ட இலாப சீட்டுக்கு மேலதிகமாக விரைவில் 40 ரூபா விலைக்கொண்ட அதிர்ஷ்ட இலாப சீட்டை அறிமுகப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என 40 ரூபா பெறுமதியான லொத்தர் சீட்டு ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிணங்க, லொத்ர் சீட்டு ஒன்றின் விலை,20 ரூபா மற்றும் 40 ரூபா என்ற அடிப்படையில் இனிவரும் காலங்களில் விற்பனை செய்யப்படும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

40 ரூபா விலை கொண்ட லொத்தர் சீட்டுகள், வெற்றிப் பெறுவதற்காக அதிக வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.