சிறீலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள்

347 0

சிறீலங்கா அரசாங்கத்தின் முடிவுகளை எடுக்கும் விவகாரத்தில் மேற்குலக இராஜதந்திரிகள் தலையீடு செய்துவருவதாக கூட்டு எதிரணியின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்குலக சக்திகளை திருப்திப்படுத்துவதற்காக சிறீலங்கா அரசாங்கத் தலைவர்கள் தேசிய பாதுகாப்பு நலன்களை விட்டுக்கொடுப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேற்குலக ஆட்சியாளர்களின் விருப்பத்துக்கு இவர்கள் செயற்பட்டு வருகின்றனர். அத்துடன், அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் சிறீலங்காவின் அமைச்சர்களான சாலக ரத்நாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் ஜெயந்த ஜெயசூரிய வெளிவிவகாரச் செயலர் எசல வீரக்கோன் ஆகியோருடன் வெளிநாட்டு இராஜதந்திரிகளும் கலந்துகொண்டனர்.

இதில், குற்றவியல் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம், பொதுமக்களை பாதுகாக்கும் கட்டளைச்சட்டம் ஆகியவற்றில் திருத்தங்களைச் செய்வது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில், பிரித்தானியா, பிரான்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், டச்சு, ஜேர்மன், இத்தாலி மற்றும் ருமேனிய நாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர். சிறீலங்கா நாட்டு சட்டங்களை இயற்றும் கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டது எவ்வாறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.