அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது

234 0

கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் வழங்கிய ஆணையை புறந்தள்ளி விட்டு தற்போதைய அரசாங்கம் ஊழல் மற்றும் மோசடியான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகிறது என்பதை முழு நாடு மாத்திரமல்ல ஐக்கிய தேசியக் கட்சியும் ஏற்றுக்கொண்டுள்ள விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர மோசடி தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதில் பிரதான குற்றவாளி அர்ஜுன் அலோசியஸ், இரண்டாது இடம் அர்ஜுன் மகேந்திரன் எனவும் பிரதான சூத்திரதாரி ரணில் விக்ரமசிங்க எனவும் அளுத்கமகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் நேற்று 17 விடயங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் அதன் மூலம் இந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.