நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை- தேசிய மருத்துவ ஆணையம்

233 0

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை எழுத வயது உச்சவரம்பு இல்லை என்று தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து குடியுரிமை மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் மணீஷ் கூறியதாவது:-

நீட் தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு 25-ஆக இருந்தது. அது இப்போது நீக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.  இதற்காக தேசிய மருத்துவ ஆணையத்துக்கு நான் நன்றி கூறுகிறேன். நாட்டில் ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த நடவடிக்கை மூலம் அதிகமான பேர் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். நம் நாட்டில் அதிக மருத்துவர்களை உருவாக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.