சென்னையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தடுப்பூமி முகாம் ரத்து குறித்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. பொது மக்கள் பலரும் முகாமை பயன்படுத்தி இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி வருகின்றனர். மேலும், பூஸ்டர் தடுப்பூசிகளும் செலுத்திக் கொள்கின்றனர்.
இதற்கிடையே வரும் 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், நகர்ப்புற தேர்தல் காரணமாக வரும் 19-ம் தேதி நடைபெற இருந்த தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

