தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி புதுவை எல்லையில் மது விற்பனை அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தலைவர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
புதுவையை ஒட்டி உள்ள தமிழக பகுதியான கடலூர், விழுப்புரம் மாவட்டத்திலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு மது சப்ளை செய்ய புதுவையில் இருந்து மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா? என்பதை பறக்கும் படையினர் கண்காணித்து வருகிறார்கள்.
சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்திற்கு புதுவையில் இருந்து கடத்தி சென்ற மது பாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
புதுவையில் முன்பு தமிழகத்தை விட மதுவின் விலை மிகவும் குறைவாக இருந்தது. தற்போது கொரோனா வரி உள்ளிட்டவைகளால் புதுவையில் மது விலை அதிகரித்து உள்ளது.
ஆனால் ஒரு சில ரக மது தமிழகத்தை விட மிக குறைவான விலையில் விற்கப்படுகிறது. இதனால் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மது பிரியர்கள் புதுவை வந்து மது அருந்தி செல்கின்றனர்.
தற்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி புதுவை எல்லையில் மது விற்பனை அதிகரித்து உள்ளது.
கடலூர் மாவட்ட எல்லை பகுதியான கன்னியக்கோவில், விழுப்புரம் மாவட்ட எல்லையான மதகடிப்பட்டு, கனகசெட்டிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மது, சாராயம், கள் விற்பனை அதிகரித்து இருக்கிறது. சில மது பிரியர்கள் போலீசாருக்கு தெரியாமல் அதிக மதுபாட்டில்களை வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, தமிழகத்தை விட புதுவையில் மது விலை சற்றுதான் குறைவாக உள்ளது. இதனால் விற்பனை ஓரளவுதான் இருக்கிறது.

