எம்.பி. பதவி பறிபோகும் நிலையில் அத்துரலியே ரத்ன தேரர்!

214 0

15893966932நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க போவதாக அறிவித்துள்ளதை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் நியமிக்கப்பட்ட ரத்ன தேரர், சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதால், அவரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஒருவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.

இதனடிப்படையில், இது சம்பந்தமாக அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படலாம் எனக் கூறப்படுகிறது.

வெளிநாடு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் இந்த விடயம் குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.