ரயிலில் மோதி விபத்து நால்வர் பலி

279 0
காலி ரத்கம பொலிஸ் பிரிவில்  ரில்லம்ப ரயில் கடவையில் பயணித்த முச்சக்கரவண்டி, ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கிய சென்ற ரயிலில் மோதியே இன்று (01) முற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில், சாரதி, சாரதியின் மனைவி, சாரதியின் தந்தை மற்றும் சாரதி மனைவியின் தாய் ஆகியோர் பயணித்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, முச்சக்கரவண்டி சாரதி, சாரதியின் தந்தை மற்றும் சாரதி மனைவியின் தாய் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

பின்னர், அங்கு சிகிச்சைப் பெற்ற நிலையில், சாரதியின் மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

46, 47 மற்றும் 84 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.