மலையகத்தில் கடும் வறட்சி

306 0

மலையகப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக நிலவும் வெயிலுடன் கூடிய வறட்சியான காலநிலையில் நீரேந்தும் பிரதேசங்களில் நீர் நிலைகள் வற்றியுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் காடுகளை தீ வைக்கும் நாசகார செயல்களும் இடம்பெற்று வருகின்றது.

வறட்சியான காலநிலையினால் காசல்றி, மவுசாகலை, மேல் கொத்தலை மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளமையில் தோட்டப்பகுதி மக்கள் பெரும் அவதியுறும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

மேலும் தேயிலைத் தொழிற்துறையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.