ஜனவரி மாதத்தில் மெட்ரோ ரெயிலில் 25.19 லட்சம் பேர் பயணம்

268 0

மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22-2-2021 முதல் 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடைப்பிடிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில் தமிழக அரசு தளர்வுகள் அறிவித்ததை தொடர்ந்து சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் 50 சதவீத இருக்கை வசதிகளுடன் இயக்கப்பட்டு வருகிறது.

1-1-2021 முதல் 31-12-2021 வரை மொத்தம் 2 கோடியே 53 லட்சத்து 3 ஆயிரத்து 383 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

1-1-2022 முதல் 31-1-2022 வரை மொத்தம் 25 லட்சத்து 19 ஆயிரத்து 252 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 3-1-2022 அன்று ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 977 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2022 ஜனவரி மாதத்தில் மட்டும் கியுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 74 ஆயிரத்து 879 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும் பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 14 லட்சத்து 60 ஆயிரத்து 655 பயணிகள் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியுஆர் குறியீடு பயணச்சீட்டில் 11-9-2020 முதல் 20 சதவீத கட்டணத்தை தள்ளுபடி வழக்கம் போல் வழங்கி வருகிறது.

மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22-2-2021 முதல் 20 சதவீத கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் சரியாக முககவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.