யாழில் பல்கலைக் கழக மாணவி திடீரென உயிரிழப்பு!

333 0

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாகச் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இணுவில் மேற்கைச் சேர்ந்த 23 வயதான சிவகரநாதன் திவாகரி என்ற மாணவியே உயிரிழந்துள்ளார். இவர் சப்ரகமுவ பல்கலைக் கழகத்தில் கற்கின்றார்.

காய்ச்சல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆயினும் சிகிச்சை பயனின்றி இன்று திங்கட்கிழமை அவர் உயிரிழந்தார்.

அவரிடம் இருந்து பெறப்பட்ட குருதி மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றும், அவர் டெங்குத் தொற்றால் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் ஆராயப்படுகின்றது என்றும் மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.