வவுனியாவில் யுவதி ஒருவர் நஞ்சருந்திய நிலையில் வவுனியா வைத்தியசாலையில் நேற்றுச் சேர்க்கப்பட்டுள்ளார்.
தாய், தந்தையரை இழந்த 23 வயதான இந்த யுவதி, உறவினரான பெண் ஒருவருடன் நேரியகுளத்தில் வசித்து வந்துள்ளார்.
அதன்பின்னர் வவுனியாவில் உள்ள ஆடைத் தொழில்சாலை ஒன்றுக்குப் பணிக்குச் சென்ற அவர், மதகுவைத்தகுளத்தில் வாடகை வீடொன்றில் தனிமையில் வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
யுவதி நஞ்சருந்தியமைக்கு காதல் விவகாரமே காரணம் என்று கூறப்படுகின்றது.
யுவதியும், இளைஞர் ஒருவரும் 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர் என்றும், யுவதி திருமணம் செய்யக் கோரியபோது இளைஞர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது.
அதனால் மன விரக்தியடைந்த நிலையில் பெண் தவறான முடிவெடுத்து நஞ்சருந்தியுள்ளார் என்று கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரகணை முன்னெடுத்து வருகின்றனர்.

