யாழில் குளியலறையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

301 0

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு மேற்கில் பெண் ஒருவர் குளியலையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரெழு மேற்கு, சாய்பாபா ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் இருந்தே பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. செல்லத்துரை ரஞ்சினி என்ற 55 வயதுப் பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் இளைய சகோதரர் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்

இவர் வீட்டில் தனித்து வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணின் உயிரிழக்கான காரணம் உடற்கூறாய்வுப் பரிசோதனையின் பின்னரே தெரியவரும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.