இராணுவத்தின் படுகொலை வழக்கு..! 3 வருடத்தின் பின் வெளிவந்த தகவல்!!

226 0

army-1தூய குடிநீரை பெற்றுத்தருமாறு கோரி கம்பஹா வெலிவேரிய பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயம் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பான வழக்கு 3 வருடங்களின் பின்னர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

ரத்துபஸ்வெல பகுதியிலுள்ள தொழிற்சாலையினால் வெளியேற்றப்படும் கழிவானது குடிநீரில் கலப்பதால் பாதிக்கப்பட்ட மக்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தினை கலைப்பதற்க்காக சென்ற இராணுவத்தினர் அங்கு இருந்த தேவாலயத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அங்கிருந்த 3 பொதுமக்கள் பலியானதுடன் பலர் காயமடைந்திருந்தனர்.

குறித்த வழக்கானது இன்று கம்பஹா நீதிமன்றத்தில் நீதவான் டி.ஏ. ருவன் பத்திரண முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் குறித்த சம்பவம் தொடர்பில் மேல்மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்கவிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டு நீதிமன்றத்த்தில் சிறப்பு பொலிஸார் சமர்பித்திருந்தனர்.

பல தடவைகள் குறித்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டபோதும் பயனளிக்கவில்லை என்றும், அன்று இராணுவத்தினரை அப்பகுதிக்கு யார் அழைத்தது என்று தெரியவில்லை என அநுர சேனாநாய வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

அத்துடன் குறித்த துப்பாக்கி பிரயோகத்தின் போது ஒருவர் மட்டுமே பலியானதாக அரசாங்கத்தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.