இறப்பர், தெங்கு மற்றும் கறுவா போன்றவைகளின் ஏற்றுமதி மூலம் இவ்வாண்டு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சரான ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
சில சவால்கள் இருந்த போதிலும், இந்த வருடம் பெருந்தோட்டக் கைத்தொழிலுக்கு செழிப்பானதாக அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தேயிலை மீள் நடுகை இந்த வருடம் ஒப்பீட்டளவில் அதிகமாக காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

