விவசாய அமைச்சின் புதிய செயலாளராக டிஎம்எல்டி பண்டாரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, அனுஷ பல்பிட 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக கடமையாற்றவுள்ளார்.
இன்று முற்பகல் ஜனாதிபதியால் இந்த நியமனம் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

