பாடசாலை போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்!

263 0

எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கம் சலுகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தாவிட்டால் 2022 ஜனவரி முதல் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அகில இலங்கை மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை சிறுவர் போக்குவரத்துச் சங்கம் எச்சரித்துள்ளது.

உலகளாவிய விலை வீழ்ச்சியின் போது உள்ளுர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமையால் சங்கம் ஏமாற்றமடைவதாகவும், சலுகைகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவரான ருவன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

சங்கத்திற்கு மாற்று வழிகள் இல்லை எனவும், பெற்றோருக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க தங்களால் இயன்றவரை முயற்சித்தாலும், குறிப்பாக வருமானம் இல்லாமல் ஒரு வருடத்திற்கு மேல் கழிந்துள்ள நிலையில் சாரதிகளால் இந்த விலை உயர்வைத் தாங்க முடியாது.

டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைக் காலம் முடிவடைந்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதால், அரசாங்கம் 10 நாட்களை எடுத்துக்கொண்டு, எரிபொருள் விலை தொடர்பில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வோருக்கு சலுகைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் எனவும் அவர் முன்மொழிந்தார்.

நாங்கள் ஒரு கூப்பன் முறையை கூட பாராட்டுவோம். இல்லையெனில், ஜனவரி முதல் குறைந்தபட்சம் 20% கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.