அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மூன்று நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஹட்டன் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நோயாளர்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை இல்லாததால், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற நோயாளிகள் வரிசையில் காத்திருந்தனர்.
அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை செய்யக் கிடைக் காததால் வாழ்க்கைச் செலவு அதிகமாக இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற பெரும் தொகையை செலுத்த வேண்டியுள்ளதாக நோயாளிகள் கவலை தெரிவித்தனர்.

