நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின விழா சென்னை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
கொரோனா நோய் தொற்று குறைந்ததை தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான போக்குவரத்து பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இதனால் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்
இந்த நிலையில் உலக சேலை தினம் நேற்று (21-ந் தேதி) கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டும் நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் சென்னை விமான நிலைய பெண்கள் நலச்சங்கம் சார்பில், சர்வதேச சேலை தின விழா சென்னை விமான நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
விமான நிலையத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகள், விமான நிறுவனங்களைச் சேர்ந்த 75 பெண்கள், விதவிதமாக சேலைகளை அணிந்து, ஒய்யார நடை அணிவகுப்பில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்ற பெண்கள் 75 விதமாக சேலை அணிந்து கலக்கலாக வந்து பார்வையாளர்களை கவர்ந்தனர். இதனால் நிகழ்ச்சி களைகட்டியது. நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் உட்பட பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.

