அரசாங்கத்துக்கு கிடைக்கும் புகழை தடுக்க சிலர் முயற்சி!-மைத்திரி

218 0

13567364_10154165482046327_948806607344350334_nஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் சலுகையை பெற்றுக்கொடுக்க தீர்மானித்துள்ளதையடுத்து அரசாங்கத்திற்குக் கிடைக்கும் புகழையும் கௌரவத்தையு ம் தடுப்பதற்கு சிலர் பண்பற்ற முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதிஇதனைக் கூறியுள்ளார். இந்த முயற்சி நாட்டை சமஷ்டி முறைக்கு இட்டுச்செல்லவோ, அல்லது நாட்டைத் துண்டாடவோஅல்ல என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்த்து தேசிய ஐக்கியத்தை உறுதிப்படுத்திநியாயமான ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பி உலகின் அங்கீகாரத்தைப் பெற்ற உன்னத நாடாகஎமது நாட்டை மிளிரச் செய்வதற்காகவே இந்த முயற்சி என ஜனாதிபதி விளக்கமளித்துள்ளார்.

இந்த நாட்டு மக்களால் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில்நாட்டின் முன்னேற்றப் பயணத்திற்கு பல்வேறு தடைகள் காணப்பட்டது.தற்போதைய அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அந்த பிரச்சினைகளைதீர்த்து அனைத்து நாடுகளுடனும் நட்புறவைக் கட்டியெழுப்பி அபிவிருத்தி மற்றும் பொருளாதாரநிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

வெளிநாட்டு முதலீடுகளை நாட்டில் இடம்பெறச் செய்யும் போது நாட்டை விலை பேசுவதாக சிலர்கோசம் எழுப்புகின்றனர்.

பல்லாண்டு கால வரலாற்றுப் புகழ் வாய்ந்த எமது தாய்நாட்டின் பெறுமதியை நன்றாகப்புரிந்து கொண்டு நாட்டைப் பாதுகாப்பதற்கும் வளப்படுத்துவதற்கும் அரசாங்கம்அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.