மகாராஷ்டிரா: தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம் கொரோனா தடுப்பூசி சப்ளை

259 0

மகாராஷ்டிரா மாநிலத்தில் பழங்குடியினர் வாழும் தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம் கொரோனா தடுப்பூசிகளை அதிகாரிகள் அனுப்பி வருகிறார்கள்,

இந்தியாவில் 2-வது கொரோனா அலை தாக்கியதில் இருந்து தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கை 50 சதவீதத்தை தாண்டியுள்ளது.
தற்போது ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஒமைக்ரானில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனக் கருதப்படுகிறது. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி மக்களை விரைவாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள தீவிரம் காட்டி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பின்தங்கிய பழங்குடியினர் வாழும் இடங்களுக்கு அதிகாரிகளும், வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் தடுப்பூசியை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டம் ஜவ்ஹார் தாலுகாவில் உள்ள தொலைதூர இடங்களுக்கு டிரோன் மூலம் தடுப்பூசிகளை அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது.
கோப்புப்படம்
அதன்மூலம் ஜவ்ஹாரில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இருந்து டிரோன் மூலம் ஜாப் என்ற கிராமத்திற்கு தடுப்பூசி அனுப்பப்பட்டது. 9 நிமிடங்களில் அங்குள்ள தொடக்க சுகாதார மையத்திற்கு டிரோன் தடுப்பூசிகளை கொண்டு சேர்த்தது. இதன்மூலம் மகாராஷ்டிரா மாநிலத்தில் முதன்முறையாக டிரோன் மூலம் தடுப்பூசி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.