முதலீட்டுச் சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் போது அரசாங்கம் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
பெரும் தொகை சம்பளம் வழங்கப்படும் என ஒப்பந்தங்களுடன் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றக் குழுக்களின் முன்னேற்றத்தை சீர்குலைக்க அரசாங்கம் முயல்கிறது , பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் பலர் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

