இங்கிலாந்தில் ஒரே நாளில் 79 ஆயிரம் பேருக்கு கொரோனா: பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை

272 0

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தில் ஒரு பக்கம் ஒமைக்ரான் தொற்று தீவிரம் காட்டத்தொடங்கி உள்ள நிலையில், கொரோனா வைரஸ் பரவலும் அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் அங்கு ஒரே நாளில் 78 ஆயிரத்து 610 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் மக்கள் இதையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொள்கிறபோது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விட்டி தேவையில்லாமல் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.