நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும்- வி.சிவஞானசோதி (காணொளி)

316 0

nallinakka vaaramநாட்டின் பல்வேறு இன, மத, மொழிகளைச் சேர்ந்த அனைவரையும் பேதங்களின்றி ஒருங்கிணைந்து, நல்லிணக்கத்திணை எற்படுத்தும் செயற்பாடே தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தின் நோக்கமாகும் என தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

வடமராட்சி பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் இன்று நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வரா நிகழ்வில் உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வாரத்தினை இவ்வாரத்தில் மாத்திரம் கடைப்பிடிக்காது பாடசாலை ரீதியாக மாணவர்கள் சாதாரண பாடத்திட்டம் போன்று தொடற்சியாக முன்னெடுக்க வேண்டும் எனவும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி கேட்டுக்கொண்டார்.

ஹாட்லிக்கல்லூரியில் அதிபர் தர்மலிங்கம் முகுந்தன் தலைமையில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வார நிகழ்வில் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வார பிரகடனத்தினை மேற்கொண்டனர்.

நிகழ்வில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பதில் வெளிவிவகார அமைச்சர் ஹஸா டி சில்வா, யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ப.செந்தில்நந்தனன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனவரி 08 தொடக்கம் 14 வரை பிரகடனப்படுத்தப்பட்ட தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க வார நிகழ்வுகள் நாடுபூராகவும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.