தங்காலையில் திடீர் தேடுதல்

224 0

17630276052தங்காலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய தினமொன்றில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் காணிகளை சீனாவிற்கு கையளிக்க வேண்டாம் என கோரி துறைமுக பகுதியில் கலகத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சிலரை தேடியே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

இந்தநிலையில். சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், சம்பவம் தொடர்பாக மேலும் சிலர் இருப்பதாக கிடைத்த தகவலுக்கு அமைய தற்போது சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.