பெண்ணின் தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்த இராணுவ அதிகாரி கைது

348 0

அவிசாவளை பிரதான பேருந்து நிலையத்தில் பெண்ணொருவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் செல்ல முயற்சித்த இராணுவ சார்ஜன்ட் ஒருவரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

இந்த சந்தேக நபர், பெண்ணின் கழுத்தில் இருந்த சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்த போது, அந்த பெண்ணின் கையில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கையடக்க தொலைபேசிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அவிசாவளை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரி, எகலியகொடை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளார்.