முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிற்கு அமெரிக்காவில் அதி உயர் விருது!

206 0

முன்னாள் இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவிற்கு அமெரிக்காவில் அதி உயர் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராணுவ கல்லூரியின் அதி உயர் கௌரவிப்பு பெறுவோர் பட்டியலில் மகேஷ் சேனாநாயக்க உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை இராணுவத் தளபதி ஒருவருக்கு இந்த அதி உயர் விருது வழங்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க இராணுவக் கல்லூரியில் கற்று அந்தந்த நாடுகளின் இராணுவத்தில் மிகச் சிறந்த சேவையை வழங்கிய படையதிகாரிகளை கௌரவப்படுத்தி ஊக்குவிக்கும் நோக்கில் இந்த United States Army Command and General Staff College International Hall of Fame விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.