முல்லைத்தீவில் இருபதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன (காணொளி)

271 0

mullai pajirமுல்லைத்தீவில் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளதுடன் எஞ்சிய பயிர்செய்கைகளைப் பாதுகாப்பதற்கு விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

நாட்டில் தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சி காரணமாக பெருமளவான பயிர்செய்கைகள் அழிவடைந்துள்ளன.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில்; இவ்வாண்டு 41 ஆயிரம் ஏக்கருக்கும் மேலான நிலப்பரப்பில் காலபோக செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை இன்னும் ஒரு மாதங்களில் அறுவடை செய்யக்;கூடிய நிலையில் உள்ள நெற்பயிர்களை பாதுகாக்கும் வகையில் குளங்களில் உள்ளநீரை, நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு நீரை இறைத்து பயிர்செய்கைகளை ஓரளவு பாதுகாத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பாண்டியன் வெளிப்பகுதியில் மானாவாரியாக செய்கை பண்ணப்பட்ட 675 ஏக்கர் நெற்பயிர்;களை பாதுகாக்கும் பொருட்டு மருதமடுக்குளத்தில் இருந்து நீரைக்கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு விவசாயிகள் தற்போது நிலவும் கடும் வறட்சி காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.