ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் மக்கள் கவலை(காணொளி)

253 0

kaddujanaiமுல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் காட்டுயானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் வெளிவயல்குளம் பகுதிக்குள் புகுந்த காட்டுயானைகள் பெருமளவான நெற்பயிர்களை அழித்து சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மன்னாகண்டல் வெளிவயல் குளத்தின் கீழ் 650 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்களில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டபோதும் பருவமழையின்மை காரணமாக பெருமளவான செய்கைகள் கைவிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் எஞ்சியுள்ள பயிர் செய்கைகளை நீர் இறைக்கும் இயந்திரங்களை கொண்டு கிணற்று நீரைப்பயன்படுத்தியும் பவுசர் மூலம் தண்ணீர் எடுத்து வந்தும் நீர் இறைத்து விவிசாயிகள் பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை புகுந்த காட்டு யானைகள் பெருமளவு பயிர்களை அழித்து நாசம் செய்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை வயலில் காவலுக்கு இருந்த விவசாயி காட்டு யானையின் தாக்குதலில் இருந்து உயிர்தப்பியுள்ளதாகவும் ஒட்டுசுட்டான் மன்னாகண்டல் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.