பிரதேச சபைகள் மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த காணிகளை பொறுப்பேற்க வேண்டும்- ஐங்கரநேசன்  (காணொளி)

287 0

malayaka thaipongalமாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்திருந்த காணிகளை பிரதேச சபைகள் பொறுப்பேற்க வேண்டும் என வடக்கு மாகாண பதில் முதலமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உள்ளுராட்சி சபை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இன்று வடக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் மத்தியில் நடாத்திய கூட்டத்தில் மவீரர் துயிலும் இல்லங்களைப் பொறுப்பேற்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு உள்ளுராட்சி சபைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் 2017 ஆண்டு

உள்ளுராட்சி சபைகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் உள்ளுராட்சி சபைகள் நாய்களைப்பிடித்து கருத்தடை மேற்கொள்ள வேண்டும், வளர்ப்பு நாய்களுக்கு அனுமதி அட்டைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தெருநாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கேற்ப கருத்தடை சிகிச்சையை மெற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அதே போன்று துவிச்சக்கர வண்டிகளுக்கு இலக்கத்தகடு வழங்குவதற்குரிய நடைமுறையை மீண்டும் உள்ளுராட்சி சபைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கட்டாக்காலி மாடுகளை உள்ளுராட்சி சபைகள் பிடித்து வளர்க்க விரும்பியவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.