களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது (காணொளி)

315 0

batti-hospitelமட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

இந்த கட்டிட திறப்பு நிகழ்வு தொடர்பில் ஆராயும் வகையில் ஜனாதிபதி செயலக உதவி சிரேஷ்;ட செயலாளர் தலைமையிலான குழுவொன்று களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஜெய்க்கா திட்டத்தின் கீழ், மத்திய சுகாதார அமைச்சின் நிதியொதுக்கீட்டில்; 415 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை கட்டிடமே ஜனாதிபதியினால் திறந்துவைக்கப்படவுள்ளன.

அத்துடன், ஜனாதிபதி வருகையை முன்னிட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நடைமுறை விடயங்கள் தொடர்பாக இந்த குழுவினர் ஆராய்ந்துள்ளனர்.

இந்த குழுவானது கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் மற்றும் ஜனாதிபதி செயலக சிரேஸ்ர உதவிச் செயலாளர் நாளக்ககருவீர தலைமையில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் குணரெட்ண, மட்டு அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸமா அதிபர் ஜெயகொடஆராட்சி, மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் அத்தியட்சகர், களுவாஞ்சிகுடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்திட்சகர், நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் சுகாதார திணைக்களம் சார்பாக அமைச்சின் செயலாளர் கருணாகரன், மாகாண சுகாதார பணிப்பாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோருடன் பிரதேச செயலாளர் எம்.கோபாலரத்தினம், பிரதேச சபை செயலாளர் குபேரன், வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

514 மில்லியன் ரூபாய் செலவில் சத்திர சிகிச்சை கூடம், அவசர சிகிச்சை பிரிவு, ஆய்வு கூடம், தொற்று நீக்கப் பிரிவு, சிறுபிள்ளை விடுதி, மகப்பேற்று விடுதி, இன்னும் பல ஆண்,பெண் விடுதிகள் உள்ளடங்களாக இந்த கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த வைத்தியசாலை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம்; திகதி திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.