மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் (காணொளி)

282 0

batti-denguடெங்கு நோய் பெருக்கம் அதிகமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்புகள் உள்ள பகுதியாக மட்டக்களப்பு மாநகர சபை பகுதிகளில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட  சோதனை நடவடிக்கையின் போது 210 வீடுகள் மற்றும் அதனை அண்டிய இடங்கள் சோதனையிடப்பட்டன.

இதன் போது டெங்கு குடம்பிகள் உள்ள இடங்களாக  12  இடங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய வகையில் சூழலை வைத்திருந்த 27 பேருக்கு எச்சரிக்கை அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு  பொது சுகாதார பரிசோதகர் அமுதமாலன் தெரிவித்தார்.

அத்துடன், 12 பேருக்கு எதிராக எதிர்வரும் 16 ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நுளம்பு பரவக்கூடிய வகையில் காணப்பட்ட பொருட்கள் அகற்றப்பட்டதுடன் மாலை வேளைகளில் இப்பகுதியில் புகை விசுரப்படுவதாக சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சோதனை நடவடிக்கையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாநகர் சபை ஊழியர்களும் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.