வீடுகளில் சிகிச்சை பெறும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வீடுகளில் நோயாளர்களைப் பராமரிக்கும் வைத்திய குழுவின் பிரதானி விசேட வைத்தியர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளர்களின் எண்ணிக்கை 20 முதல் 30 சதவீதம் வரையில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்தமைக்கு தடுப்பூசி ஏற்றலே பிரதான காரணமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

