ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு வருவோர் முன்பதிவு செய்யக் கோரிக்கை

313 0

அம்பாந்தோட்டையிலுள்ள ரிதியகம சஃபாரி பூங்காவுக்கு வருவோர் முன்கூட்டியே முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுநோயை அடுத்து சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி சஃபாரி பூங்காவுக்கு வருவோரின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தேவையான தகவல்களை 0473620410 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் அல்லது 070 6988788 க்கு வட்ஸ்அப் செய்தியை அனுப்புவதன் மூலம் பெறலாம் என்று சஃபாரி பூங்கா தெரிவித்துள்ளது.