மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்தும் சாத்தியமில்லை – டலஸ் அழகப்பெரும

252 0

தேர்தல் முறைமையில் திருத்தம் செய்யப்படாது மாகாண சபைத் தேர்தலை இந்த வருடத்துக்குள் நடத்துவதற்கான சாத்தியமில்லை என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமையில் திருத்தம் ஏற்படுத்தப்பட்ட பின்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நிலைப்பாட்டில் ஜனாதிபதி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த வருடத்தில் இரண்டு மாதங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் முறைமையில் திருத்தத்தைச் செய்து மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.