நவம்பர் 1-ந்தேதி தமிழ்நாடு தினம் கொண்டாட வேண்டும்- தொல்.திருமாவளவன் கோரிக்கை

214 0

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர்-1 ந்தேதியை நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. சென்னை கோட்டையில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் கூறியதாவது:-

விடுதலை சிறுத்தைகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாநில எஸ்.சி. எஸ்.டி. ஆணையம் உருவாக்கப்பட்டதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர்-1 ந்தேதியை நமது அண்டை மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா போன்ற மாநிலங்கள் அவர்களுக்கான தனிக்கொடியை ஏற்றி கொண்டாடி வருகிறார்கள்.

அதே போல் தமிழகத்திலும் நவம்பர் 1-ந்தேதியை தமிழ் நாடு தினமாக அறிவித்து கொண்டாட வேண்டும் என்றும் முதல்- அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

அ.தி.மு.க.வை சசிகலாவால் மீட்டெடுக்க முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வி என்றார். பா.ஜனதாவோடு இணக்கமாக செயல்பட்டு பின்னடைவை சந்நித்துவரும் அ.தி.மு.க. தலைமையை சசிகலா கைபற்றுவாரா? என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். ஆனாலும் இது காலம் தாழ்ந்த முடிவு.

பா .ஜனதாவை சேர்ந்த எச்.ராஜாவின் பேச்சுக்களை தமிழக அரசு கவனித்து வருகிறது. பெரியார் குறித்தும் திமுக குறித்தும் அவதூராக பேசிவரும் எச்.ராஜா மீது சட்ட நடவடிக்கை பாயும் எனவும். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் சட்டத்தின்படி அவர் மீது நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என நம்பிக்கை உள்ளது நடவடிக்கை எடுக்க விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.